சண்டையால் எதையும் சாதிக்க முடியாது அன்பும் உறவும் மட்டுமே சாதிக்க முடியும் இன்று மூன்று தம்பதியர்களுக்கு குடும்ப நல வழக்குகளில் சேர்ந்து வாழ தீர்வு காணப்பட்டது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி பேச்சு:
தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இதுவரை இந்த ஆண்டு தீர்வு காணப்பட்டு அதற்காக 45 கோடி ரூபாய் திருத்தொகை வழங்கப்பட்டுள்ளது முதன்மை மாவட்ட நீதிபதி மணிமொழி பேச்சு
இந்த ஆண்டின் மூன்றாம் கட்ட தேசிய மக்கள் நீதிமன்றம் விழுப்புரம் சட்டப்பணிகள் ஆணைய சார்பில் துவக்கப்பட்டது இதனை உயர்நீதிமன்ற நீதிபதி திரு தண்டபாணி துவக்கி வைத்தார் இதில் விழுப்புரம் முதன்மை நீதிபதி மணி மொழி உள்ளிட்ட நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் வேலவன்,நடராஜன்,டி.எஸ்.சுப்பிரமணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர் இந்த ஆண்டிற்கான மூன்று கட்டமாக மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது இதில் இரண்டு கட்டங்கள் நடந்து முடிந்துள்ளன மூன்றாவது கட்டம் என்று துவக்கப்பட்டுள்ளது இதில் கலந்துகொண்ட முதன்மை நீதிபதி மணிமொழி பேசுகையில் விழுப்புரம் மாவட்டத்தின் முதற்கட்டமாக 2436 வழக்குகள் தீர்வு காணப்பட்டு அதற்காக 20 கோடி தீவு தொகையாக வழங்கப்பட்டது இரண்டாம் கட்டமாக 3958 வழக்குகள் தீர்வு காணப்பட்டு அதற்காக ரூபாய் 25 கோடி தீர்வுத்தொகை வழங்கப்பட்டது மூன்றாம் கட்ட மக்கள் நீதிமன்றம் இன்று 3000 மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவித்தார் தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதி திரு தண்டபாணி பேசுகையில் : சண்டையால் எதையும் சாதிக்க முடியாது அன்பும் உறவும் மட்டுமே தீர்வு மேலும் இன்று மூன்று தம்பதிகளுக்கு குடும்ப நல வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது அதுவே மகிழ்ச்சியை அளிக்கிறது மேலும் தம்பதிகள் மட்டும் அல்லாமல் அவரது குடும்பத்தினரை சேர்ந்தவற்குளும் அதானல் சிரமப்பட்டு வந்த நிலையில் இன்று சேர்ந்து வாழ சமரச தீர்வு காணப்பட்டது ஒரு மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் ஏற்படுத்தியுள்ளது இது அனைவருக்கும் மகிழ்ச்சி என்றும் தேசிய மக்கள் நீதிமன்றம் என்பது மக்களுக்கான நீதிமன்றம் மக்களுக்கு தேவையானவற்றை ஏற்படுத்துவது மட்டுமே இந்த நீதிமன்றத்தின் பணி இதன் மூலம் மக்கள் நேரடியாக தங்களுடைய வழக்குகளை தீர்வு காண முடியும் குடும்ப நல வழக்குகள் விபத்து வழக்குகள் காப்பீடு வழக்குகள் உள்ளிட்டவை நேரடியாக அமர்வில் உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு தீர்வு வழங்கப்படுகிறது தீர்வு தொகையும் வழங்கப்படுகின்றது மேல்முறையீடு இல்லாமல் வழங்கப்படும் இந்த மக்கள் நீதிமன்றத்தின் மூலம் மக்கள் உடனடி தீர்வினை பெறுகின்றனர் இதனை முழுமையாக மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கண்டார்