மும்பை: மஹாராஷ்டிராவில், ஒரு பெண் டாக்டர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தற்கொலை செய்யும் முன் கையில் குறிப்பு எழுதி, சில போலீசாரின் குற்றத்தை வெளிப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சதாரா மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் டாக்டர், தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
பெண் டாக்டர் எழுதிய குறிப்பு படி, கோபால் பத்னே என்ற போலீசார் நான்கு முறை அவரை பலாத்காரம் செய்து, கடந்த ஐந்து மாதங்களாக மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக அவர் குற்றச்சாட்டுசெய்தார். மேலும் பிரசாந்த் பங்கர் என்ற மற்றொரு காவலர் அவரை உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை அவர் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் பதிவு செய்தார்.
சம்பவம் மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியதாகவும், எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் பட்னாவிஸ் சம்பவத்தை கவனித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கோபால் பத்னே சஸ்பெண்ட் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு சம்பந்தப்பட்ட போலீசரை தேடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

















