மாநில அளவிலான டென்னிஸ் வீராங்கனையாக பல போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை பெற்ற ராதிகா யாதவ், தந்தையின் கையில் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் குருகிராமின் சுஷாந்த் லோக்கில் வசித்து வந்த ராதிகா யாதவ், விளையாட்டு துறையிலும், சமீபத்தில் கலைத்துறையிலும் இடம்பிடிக்க முயற்சித்தவர். தந்தை தீபக் யாதவ், தனது மகளை நேரில் சந்தித்து அவரைச் சுட்டுக் கொன்ற சம்பவம் சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தந்தையின் சந்தேகமும் கோபமும் :
தீபக் யாதவ், தனது மகளுக்காக ரூ.2 கோடி முதலீடு செய்து டென்னிஸ் அகாடமி அமைத்ததோடு, வீடியோ பாடல் ஒன்றில் நடிக்கும்படி அழைத்து 11 மணி நேரம் அவருடன் செலவழித்திருப்பதும், மாதந்தோறும் வீட்டு வாடகைகளிலிருந்து 15-17 லட்சம் வருமானம் பெற்று வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எனினும், குடும்பத்தினரிடம் அதிக சந்தேகம் கொண்டவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். மனைவி மற்றும் மகளின் நடவடிக்கைகள் குறித்தும் அவதூறான சந்தேகங்களை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ‘கிரா ஹுவா பாப்’ என உறவினர்கள் கிண்டல் செய்ததால் ஏற்பட்ட மன உளைச்சலுடன் வீட்டிற்கு திரும்பிய அவர், அகாடமியை மூடுமாறு மகளிடம் கூறியுள்ளார். மகள் மறுப்புப் பதில் அளித்ததையடுத்து ஆத்திரம் அடைந்த அவர், துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.
விளையாட்டு துறையின் கவலை:
இந்தக் கொலை சம்பவம் குறித்து ஒலிம்பிக் தங்கப்பதக்க ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, “பெண் விளையாட்டு வீராங்கனைகள் நாட்டின் பெருமையாக இருக்கின்றனர். குடும்பங்கள் அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்க வேண்டும். அவர்கள் சிலையாக போற்றப்பட வேண்டும்” எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
கலைத்துறையிலும் உயர்ந்த கனவு:
ராதிகா யாதவ், ‘கேரவன் யுன் ஹி சல்தா ரஹா மேரா’, ‘தின் பி யுன் தல்தா ரஹா மேரா’, ‘பிர் தும்ஹாரி யாத் ஆயி ஹம்கோ’ போன்ற ஆல்பங்களில் நடித்திருந்தார். அவரது பாடல் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அவரது மரணத்திற்குப் பிறகு, அந்த வீடியோக்கள் மேலும் வைரலாகி வருகின்றன.