மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆனைக்கோவில் கிராமம் செட்டியார் தெருவை சேர்ந்த அமிர்தலிங்கம் என்பவர் மகன் சுபாஷ். இவரின் வீட்டிற்கு அருகாமையில் உள்ள ராசையன் மகன் ராஜமூர்த்தி என்பவர் மது போதையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றுள்ளார். இதனைப் பார்த்த சுபாஷ் சாலையில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கிறது ஏன் இப்படி வேகமாக செல்கிறாய் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ராஜமூர்த்தி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுபாஷின் கையில் கிழித்துள்ளார். உடனடியாக சுபாஷ் கிராம பஞ்சாயத்தாரிடம் புகார் தெரிவிப்பதாக கூறி சென்றுள்ளார் இதனால் ஆத்திரமடைந்த ராஜமூர்த்தி மது போதையில் வீட்டின் அருகே சாலை ஓரத்தில் அமர்ந்திருந்த சுபாஷின் தந்தை அமிர்தலிங்கத்தை வலது பக்கம் நெஞ்சில் கத்தியால் குத்தியுள்ளார். கத்தி குத்து பட்டு உயிருக்கு போராடிய அமிர்தலிங்கத்தை உறவினர்கள் திருக்கடையூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றபோது அமிர்தலிங்கம் உயிரிழந்தது தெரியவந்தது. இச்சம்பவம் அறிந்து வந்த பொறையார் போலீசார் அமிர்தலிங்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மது போதையில் இருந்த ராஜமூர்த்தியை கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை மேற்கொண்டார் இச்ச்ம்பவம் கிரமமக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் எற்படுத்தியுள்ளது.


















