வேளாங்கன்னி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு பங்குதந்தை அற்புதராஜ் சிறப்புத்திருப்பலி

வேளாங்கன்னி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு பேராலய அதிபர் இருதயராஜ் அடிகளார் தலைமையில் பங்கு தந்தை அற்புதராஜ் சிறப்புத்திருப்பலி நிறைவேற்றனர்: சிலுவை முக்தி செய்யும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு:

கீழ்த்திசை நாடுகளின் புனித லூர்து நகரம் என்று அழைக்கப்படும் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கன்னி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் புனித வெள்ளி சிறப்பாக கடைபிடிக்கப்பட்டது. இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி முன்னிட்டு, வேளாங்கன்னி பேராலயத்தில் காலை முதல் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கொங்கனி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறப்பு பிராத்தனை நடைபெற்றது. மாலையில் சிலுவைப்பாதை நிகழ்ச்சியும், இயேசு கிறிஸ்துவின் பாடுமரண நிகழ்ச்சிகள் குறித்த நாடகங்களும், திவ்ய நற்கருணை ஆசிரும் நடைபெற்றது. பேராலய கலையரங்கில் திருச்சிலுவை முக்தி செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து பேராலய அதிபர் இருதயராஜ் அடிகளார் தலைமையில் பங்கு தந்தை அற்புதராஜ் சிறப்புத்திருப்பலி நிறைவேற்றனர். இயேசுவின் சொரூபத்தை திருப்பலியில் கலந்துகொண்ட கிறிஸ்தவர்கள் மத்தியில் கொண்டு செல்லும் போது அவர்களும் முத்தமிட்டனர். இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை ஈடுபட்டனர். நாளை நள்ளிரவு இயேசு கிறிஸ்து உயிர்த்தெழும் நாளில் சிறப்பு மன்றாட்டு, நற்கருணை வழிபாடுகள் நடைபெற உள்ளன.

Exit mobile version