திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பைபாஸ் சாலையில் உள்ள பட்டிவீரன்பட்டி பிரிவில் அதிகாலையில் இரண்டு சுற்றுலா வேன்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
விபத்தில் கரூர், ரங்கமேடு பகுதியில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற ஒரு வேனும், பெரியகுளத்தில் இருந்து பழனிக்குச் சென்று கொண்டிருந்த மற்றொரு வேனும் இந்த விபத்தில் மோதின.
இந்த விபத்தில் மொத்தம் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. கரூர் வேனில் இருந்த 14 பயணிகளும், பெரியகுளம் வேனின் ஓட்டுநரும் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து வத்தலகுண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.
இந்த விபத்து அதிகாலை நேரத்தில் ஏற்பட்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்தில் காயமடைந்தவர்கள் திண்டுக்கல் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றனர்.