அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைகளுக்கு சேமிப்பு கிடங்கு அமைக்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைகளுக்கு சேமிப்பு கிடங்கு அமைக்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்டம்
மாவட்ட முழுவதும் தற்பொழுது பயிரிட்டு வந்த விவசாயிகள் நெற்பயிர் அறுவடைக்கு தயாராகி உள்ளது.

கூடுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விவசாயிகள் தங்கள் நெல்லை அரசுக்கு விற்கும் இந்த நிலையங்கள், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்கின்றன. இந்த நிலையங்களின் வருடத்திற்கு இரண்டு முறை நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன

அந்த வகையில் இன்று செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்துள்ள நத்தம் என்ற கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது அதற்கான விழா இன்று நடைபெற்றது இந்த விழாவிற்கு அமைச்சர் தாமு அன்பரசன் பங்கேற்று நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை தொடங்கி வைத்தார் அப்பொழுது செய்தியாளருக்கு பேட்டியளித்த அவர். தமிழக முழுவதும் விவசாயிகளுக்கு பயன்பாட்டுக்காக வருடத்திற்கு இரண்டு முறை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கிறோம் அரசு அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும். அவர் கூறினார்
மேலும் விவசாயிகள் அறுவடை செய்யும் கொள்முதல் செய்யும் நெல்களை சேமிப்பு கிடங்குகள் அதாவது குடோன் அமைத்து தரும்படி கோரிக்கை வந்துள்ளது என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.

அதற்கு பதில் அளித்த தாமு அன்பரசன் அரசு தரப்பில் முதலமைச்சர் அறிவுறுத்தல் படி நெல் கொள்முதல் சேமிப்பு கிடங்குகள் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.

Exit mobile version