மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் மீத்தேன் ஷேல் , எரிவாயு திட்டத்திற்கு  தமிழக அரசு மறைமுக ஆதரவா விவசாயிகள் எதிர்ப்பு

காவிரி டெல்டா மாவட்டத்தில் கடைமடை மாவட்டம் திருவாரூர் மாவட்டம் விவசாயத்தை முற்றிலும் நம்பியுள்ள மாவட்டம் இந்த மாவட்டத்தில் விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் மிகுந்த மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு மூலம் எரிவாயு எடுக்கப்பட்டு வந்தது தமிழக முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகள் சந்தித்து பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர் அந்த வகையில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி டெல்டா மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருந்தார் இந்நிலையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் திட்டம், ஷேல் கேஸ் மற்றும் இதர எரிவாயுக் களை எடுக்கும் திட்டங்களை செயல்படுத்த மாட்டோம் என ஓஎன்ஜிசி ஆல் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆய்வுக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய எரிசக்தி துறை அமைச்சகம் அண்மையில் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் இத்திட்டத்தை கைவிட கோரியும், மத்திய எரிசக்தி துறை இயக்குனரகம் மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனத்தை கண்டித்து, விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

Exit mobile version