2025 விதை சட்ட வரைவு மசோதாவை ஒன்றிய அரசு கைவிட வலியுறுத்தி மன்னார்குடியில் மசோதாவை நகலை எரித்து ஒன்றிய அரசுக்கு எதிராக ஐக்கிய விவசாயிகள் முன்னணி கண்டன ஆர்பாட்டம் ..
2025 விதை சட்ட வரைவு மசோதாவை கைவிட வேண்டும், பெருநாட்டின் பேச்சு வார்த்தையை ரத்து செய்திட வேண்டும், மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், அமெரிக்க இந்திய வேளாண் வணிக ஒப்பந்தத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் சட்ட வரைவு மசோதாவை நகலை எரித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ஐக்கிய விவசாயிகள் முன்னணி இணைந்து மன்னார்குடி பெரியார் சிலை முன்பு 2025 விதை சட்ட வரைவு மசோதாவை நகலை எரித்து விவசாயததை சீரழித்து கார்ப்ரேட் நிறுவனத்திற்கு துணைபோகும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன முழக்கம் எழுப்பி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்
