சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் அமைந்துள்ள முடவன் ஆற்றை தூர்வாரி சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை.10 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வடிகால் வசதியும், கிழக்குப் பகுதி கிராமங்களுக்கு பாசன வசதியும் வழங்கும் முடவனாறு பல ஆண்டுகளாக தூர்வாடப்படவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் அமைந்துள்ள முடவனாறு வைத்தீஸ்வரன் கோவில், புங்கனூர், மருவத்தூர், தொழுதூர் கற்கோவில் மல்லுக்குடி, வரவுகுடி, உள்ளிட்ட பகுதிகளுக்கு வடிகால் வசதியும் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கிராமங்களுக்கு பாசன வசதியும் வழங்கி வருகிறது.இந்த முடவனாறு வைத்தீஸ்வரன் கோவில் பகுதியை கடந்து செல்லும் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருபுறமும் ஆக்கிரமிப்புகளாலும் ஆகாயத்தாமரை கோரை படர்ந்தும் புதர்போல் காட்சியக்கும் முடவனாறு நகர் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டும் கழிவுநீர் விடப்பட்டும் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியின் கழிவு நீர் கால்வாயாக மாறி உள்ளது. மழைக்காலத்தின் போது விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகள் தண்ணீர் சூழ்ந்து பாதிக்கப்படும் நிலையில் அவசரகதியில் பெயரளவில் தூர்வாரி தண்ணீரை வெளியேற்றும் அதிகாரிகள் அதன் பின்னர் முடவனாற்றை முழுவதுமாக தூர்வார நடவடிக்கை எடுப்பதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போதும் ஆகாயத்தாமரை மற்றும் கோரை புற்கள் படர்ந்து காடு போல் காட்சி அளிக்கும் முடவன் ஆற்றை மழைக்காலம் துவங்கும் முன்பே ஆக்கிரமிப்புகள் அகற்றி விரைந்து தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.