வலங்கைமான் சுற்று வட்டார பகுதிகளில் விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளை பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் விவசாயப் பணிகள் மற்றும் கரும்பு சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் ஆண்டுதோறும் காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களில் உள்ளே புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றது இது குறித்து இந்த பகுதி விவசாயிகள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர் ஆனால் மாவட்ட நிர்வாகம் காட்டு பன்றிகளை பிடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வில்லை இதனால் சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாய நெற்பயிர்கள் கரும்பு சாகுபடி பயிர்கள் பெரிதும் சேதப்படுத்தி வருகிறது இதனால் விவசாயிகள் வயல்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது எனவே உடனடியாக மாவட்ட ஆட்சியர் விவசாயிகள் நலன் கருதி உடனடியாக வலங்கைமான் சுற்றுவட்டார பகுதிகளில் வயல் பகுதிகளில் சுற்றித் திரியும் காட்டு பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் விவசாய நெற்பயிர்கள் கரும்பு சாகுபடி பயிர்கள் மழை நீரால் சேதுமடைந்துள்ளது இதனால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கும் பொருளாதார இழப்பிற்கும் உள்ளாகி வரும் நிலையில் காட்டு பன்றிகளின் தொல்லையால் வேதனையில் உள்ளாகியுள்ளனர்
