மயிலாடுதுறை மாவட்டம் அகணி ஊராட்சியில் காட்டுப்பன்றிகள் நெற்பயிர்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்:-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா அகணி ஊராட்சியில் விவசாயிகள் விளைவித்து, தற்போது அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பொருளாதார ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகி உள்ள விவசாயிகள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தனர். காட்டுப்பன்றிகளின் தொல்லையால் வரும் காலங்களில் விவசாய பணியில் ஈடுபடுவதற்கே அச்சமாக இருப்பதாகவும், எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து காட்டு பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சேதமான நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அகணி ஊராட்சியை சேர்ந்த விவசாயிகள் பத்துக்கு மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் மனு அளித்து வலியுறுத்தினர்.
