திருவாரூர்,நவம்பர்.26- மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகளின் தன் எழுச்சி போராட்டம் துவங்கிய 5-ஆம் ஆண்டு முன்னிட்டு விவசாயிகள், தொழிலாளர்கள்
நாடு தழுவிய கருப்பு பட்டை (பேஜ்] அணிந்து
தர்ணா போராட்டம் எஸ் கே எம்,
(ஐக்கிய விவசாயிகள் சங்கம்) விவசாய தொழிலாளர், சங்கம், தொழிற்சங்கம் சார்பாக திருவாரூர் புதிய ரயில் நிலையம் எதிரே எழுச்சியாக நடைபெற்றது.
விவசாய விளைப்பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதாரவிலையை இருவகை உற்பத்தி செலவுடன் (C2+50) சட்டமாக்க வேண்டும்,
குறுவை – சம்பா -பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணமும், காப்பீடு திட்டத்தில் இழப்பீடும் வழங்கிட வேண்டும்,
தொழிலாளர் விரோத மோசடியான நான்கு சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும்,
100 நாள் வேலைத்திட்டத்திற்கான நிதியை குறைக்காமலும், 200 நாட்களாக வேலை கொடுத்திடவும், ஊதியம் ரூ. 600/- வழங்கிடவும் வேண்டும்,
வாக்காளர் தீவிர சிறப்பு திருத்தத்தை (SIR) நிறுத்திடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற தர்ணா
போராட்டத்திற்கு எஸ் கே எம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.ஆர்.ஜோசப் தலைமை ஏற்றார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.சேகர் முன்னிலை வகித்தார்,
நாகை நாடாளுமன்ற உறுப்பினர்
வை.செல்வராஜ் போராட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார்,
தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் வி.சுப்ரமணியன் போராட்டத்தில் பங்கேற்று நிறைவுறையாற்றினார்.
போராட்டத்தில் சிபிஎம் மாவட்டச்செயலாளர் டி.முருகையன்,தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர்கள் எஸ்.தம்புசாமி, கே.முருகையன்,அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச்செயலாளர்கள்
பி.கந்தசாமி,கே.ராஜா மற்றும் சிஐடியு மாவட்டத்தலைவர் கே.பி.ஜோதிபாசு,ஏஐடியூசி மாவட்டச் செயலாளர் ஆர்.சந்திரசேகர் ஆசாத் உள்ளிட்ட தொழிற்சங்கத்தின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் 300-க்கும் மேற்பட்டவர்கள் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
