மயிலாடுதுறை முத்தப்பன் காவிரி வாய்க்காலை லஸ்கர் துணையுடன் மயிலாடுதுறை முன்னாள் MLAஎம்எல்ஏ ராதா கிருஷ்ணன் அடைத்து வைத்துள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

வடகிழக்குப் பருவ மழை கடந்த 16ஆம் தேதி துவங்கியதில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நேற்று இன்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினமும், நேற்றும் பெய்த கனமழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் ஏழு சென்டிமீட்டர் மேல் மழை பெய்து பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து பல்லவராயன்பேட்டை திருவிழந்தூர், கோட்டூர் மணலூர் உக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நடவு செய்த சம்பா இளம் பயிர்கள் நீரில் மூழ்கியது. நேற்று மாலையில் இருந்து மழை இல்லாத நிலையில் விவசாயிகள் வயல்களில் உள்ள தண்ணீரை தீவிரமாக வடியவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மயிலாடுதுறை அருகே பல்லவராயன் பேட்டை வழியாக செல்லும் முத்தப்பன் காவிரி வாய்க்காலை விவசாயிகள் அடைத்ததால் தண்ணீர் வடிய வழியின்றி விக்ரமன் என்பவருக்கு சொந்தமான வயலில் நடவு செய்வதற்காக தயார் செய்து வைத்திருந்த பாய் நாற்றங்கால் நீரில் மூழ்கியது. இதனை அறிந்த விவசாயிகள் அடைக்கப்பட்ட வாய்க்காலை வெட்டிவிட்டு நீர்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பாய் நாற்றங்கால்கள் அழுகிவிடும் என்பதால் ஏழு ஏக்கரில் நடவு செய்வதற்காக வயலில் மூழ்கி இருந்த பாய் நாற்றங்கால்களை இழுத்து வந்து வாய்க்கால் கரையில் அடுக்கி வைத்துள்ளனர். வாய்க்கால் அடைத்து வைத்தது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் முன்னாள் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் அடைத்து வைத்துள்ளதாகவும், நீர்வளத் துறையைச் சார்ந்த வாய்க்காலை கண்காணிக்கும் லஸ்கரே வாய்க்கால் ஆனந்ததாண்டவபுரம் பகுதியில் அடைக்கப்பட்டுள்ளது என்று கூறுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதேபோல் குத்தாலம் தாலுக்கா கோனேரிராஜபுரம் கிராமத்தில் கனமழையில் மூழ்கியுள்ள இளம் பயிர்களை மீட்பதற்காக வயலில் உள்ள தண்ணீரை வடிய வைக்க விவசாயிகளே வாய்க்காலில் உள்ள அடைப்புகளை சரி செய்யும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version