ஐபிஎல் 2025 தொடரில் சி.எஸ்.கே அணிக்காக விளையாடும் ராகுல் திரிபாதி, இந்த சீசனில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால், ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
திரிபாதி 5 போட்டிகளில் சேர்த்து எடுத்துள்ள ஓட்டங்கள் வெறும் 55. அவருடைய அதிகபட்ச ரன் 23 என்பது மட்டுமே. மொத்தமாக அவர் ஆட்டத்தில் காட்டும் ஈடுபாடு குறைவாகவே உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அணியில் வாய்ப்பு கிடைத்தும், அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளாத நிலையில் இருப்பது போன்ற வார்ம்-அப் நடனம் மற்றும் களத்தில் காட்டும் மெத்தனமான அணுகுமுறைகள், ரசிகர்களை மேலும் சோகமடையச் செய்துள்ளன. இதனால்தான் சமூக ஊடகங்களில் ‘0% இண்டன்ட்’ என்ற விமர்சனம் டிரெண்டாகி வருகிறது.
75 லட்சம் அடிப்படை விலையுடன் ஏலத்துக்கு வந்த திரிபாதி, 3.40 கோடி ரூபாய்க்கு சி.எஸ்.கே அணியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆனால், அந்த முதலீட்டுக்கு ஏற்ற ஆட்டத்தை அவர் இதுவரை வழங்கவில்லை.
அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த சி.எஸ்.கே, லக்னோவிற்கு எதிராக வெற்றி கண்டாலும், புள்ளி பட்டியலில் கடைசி இடத்திலேயே உள்ளது. இந்த சூழ்நிலையில், திரிபாதிக்கு பதிலாக வன்ஷ் பேடி, அக்ஷய் மஹத்ரே, ஆண்ட்ரே சித்தார்த் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
திரிபாதி மீதான நம்பிக்கையை அணித் தலைமை தொடரவா? அல்லது அணிவகுப்பில் மாற்றம் வருமா? என காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.