நெல்லையில் 5 போலி அல்வா நிறுவனங்களுக்கு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சபரிமலைக்கு செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நெல்லைக்கும் வந்து பிரபல அல்வாவை கடைகளில் வாங்கிச் செல்கின்றனர். இதனால் தேவை அதிகமானதை பயன்படுத்தி போலி நிறுவனங்களின் பெயர்களில் அல்வா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது நெல்லை ரதவீதிப் பகுதி மற்றும் நெல்லை சந்திப்பில் பிரபல அல்வா கடையின் பெயரை போலியாக பயன்படுத்தி விற்பனையில் ஈடுபட்ட 5 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர் அல்வா உற்பத்தி செய்யும் நிறுவனங்களிலும் அதிரடி ஆய்வு மேற்கொண்டு போலி பெயர்களை பயன்படுத்தி தயாரித்து வைத்திருந்த சுமார் ஆயிரம் கிலோ அல்வாவை பறிமுதல் செய்தனர்.















