மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறன் 22 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி திருவாரூர் அருகே காட்டூர் கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் முரசொலிமாறன் அவரது திருவுருவப்படத்திற்கு திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருவாரூர் அருகே காட்டூர் கிராமத்தில் உள்ள மறைந்த திமுக தலைவர் கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையாரின் நினைவிடத்தில் மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறன் 22 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி .கலைவாணன் தலைமையில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் சேகர் என்கிற கலியபெருமாள், பாலச்சந்தர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

















