“மாடு மேய்க்கும் பையனும் இப்படி பேச மாட்டான்” – ராமதாஸ் கடும் விமர்சனம்

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீது கட்சி தலைவர் அன்புமணி வைத்த சமீபத்திய கருத்து சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

அண்மையில் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமதாஸை, முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். ஆனால் ராமதாஸைச் சந்திக்க முடியாத நிலையில் அன்புமணி வெளியிட்ட கூற்று பெரும் பேசுபொருளாகியுள்ளது.

அவர் கூறியிருந்தது : “அய்யாவிற்கு ஏதாவது ஆனால் தொலைச்சி போட்டுருவேன்… அய்யாவை வைத்து டிராமா பண்ணிட்டு இருக்கீங்களா?” என்ற ஆவேசமான வார்த்தைகள்.

இந்தக் கருத்துக்கு பதிலளித்த ராமதாஸ், மருத்துவ சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பிய பின் செய்தியாளர்களிடம் கடும் விமர்சனம் செய்தார்.
அவர் கூறியதாவது :

“அய்யாவை பார்த்துக்கொள்ள துப்பு இல்லை… மாடு மேய்க்கும் பையன் கூட இப்படி பேச மாட்டான். அன்புமணிக்கு தலைமைப் பண்பு இல்லை; அது முற்றிலும் அழிந்துவிட்டது.”

மேலும், “மருத்துவமனையில் இருந்தபோது அரசியல் பாகுபாடு இன்றி பலரும் நலம் விசாரித்தனர். ஆனால் ஒரு கட்சி மட்டும் நலம் விசாரிக்கவில்லை – அது புதிதாக தொடங்கிய கட்சி,” என்று ராமதாஸ் குறிப்பிட்டார்.

பாமக உள்ளகத்தில் எழுந்த இந்த கருத்து மோதல், தந்தை-மகன் உறவில் மேலும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

Exit mobile version