செங்கோட்டையன் பேசுவதற்கு சட்டசபையில் வாய்ப்பளித்த இ.பி.எஸ்.

2026-ம் ஆண்டு தமிழகக்த்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி மீண்டும் மலர்ந்துள்ளது.

இதையொட்டி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் நேற்றிரவு விருந்து வைத்தார். இந்த விருந்தில் தம்பிதுரை, சி.வி.சண்முகம் உள்ளிட்ட எம்.பி.க்களும் முக்கிய நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். இதில் செங்கோட்டையன் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் நேற்றைய விருந்தை புறக்கணித்த செங்கோட்டையனுக்கு சட்டசபையில் பேச அக்-கட்சியின்
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாய்ப்பளித்தார்.

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் செங்கோட்டையன் பேச எடப்பாடி பழனிச்சாமி வாய்ப்பளித்தார்.

Exit mobile version