இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தொடரில் வெற்றி பெற, இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம். இங்கிலாந்து வெற்றியைத் தடுக்க இந்தியா கடுமையான சவால்களை எதிர்நோக்கியுள்ளது.
இந்தக் கடைசி போட்டியில் இரு அணிகளிலும் முக்கிய மாற்றங்கள் காணப்பட்டுள்ளன. இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், புதிய வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல், இங்கிலாந்து அணியிலும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் இல்லாமல் அணியை அமைத்துள்ளனர்.
இந்த போட்டிக்கான இந்திய அணி ப்ளேயிங் லெவனில் இடம் பெற்றவர்கள் :
கே.எல்.ராகுல், யசஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், சுப்மன் கில், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜுரேல், வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்
இந்த போட்டியில் இந்திய அணி எப்படி சவால்களை எதிர்கொள்கிறது என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது