அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் : இபிஎஸ் மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி

அதிமுக பொதுச்செயலாளராக இ.பி.எஸ் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

2022 ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இக்கூட்டத்தில் ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கும் முடிவுகள் உள்ளிட்ட பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், இப்பெரும் முடிவுகள் செல்லாது எனவும், இபிஎஸ் தேர்வை ரத்து செய்யவேண்டும் எனவும் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை நிராகரிக்க கோரி இபிஎஸ் சமீபத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, நீதிபதி அதனை தள்ளுபடி செய்தார். மேலும், அதிமுகவின் பொதுச்செயலாளரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யவேண்டும் என்றும், இபிஎஸ் தேர்வுக்கு எதிரான வழக்கின் விசாரணை தொடரும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

Exit mobile version