பெட்டி கடைகளில் சாக்லேட் வடிவத்தில் போதை மாத்திரைகள்

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் 1. 100 நாள் வேலையை முறையாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் வேலையை வழங்கி சம்பளம் முழுமையாக வழங்கிட வேண்டும்‌. 100 நாள் வேலை திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் , நகராட்சி, பேரூராட்சிகளுக்க 100 நாள் வேலை திட்டத்தை உடனடியாக விரிவுபடுத்த வேண்டும். வேண்டும்தமிழ்நாட்டில் போதை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நிலைக்கு.மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் முன்பு நடைபெற்றது அதன்படி இன்று காலை மாவட்ட தலைவர் மல்லிகா தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனம் கோஷமும் எழுப்பினர். இதில் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளிடம் பேசி அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் இன்றைக்கு போதை கலாச்சாரம் என்பது பெட்டிக்கடை வரை வந்து விட்டதாகவும் சாக்லேட் வடிவத்தில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாகவும் மாணவர்கள் அதை வாங்கி சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு செல்லும் நிலைமை இருப்பதாகவும் இதனால் பெண்கள், மற்றும் பெண் குழந்தைகள் மீதான தாக்குதல் அதிகரித்திருப்பதாகவும் குற்றம் சாட்டினர் , கஞ்சா அபின் போன்றவை சர்வ சாதாரணமாக கடைகளில் விற்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

Exit mobile version