காவலர் தினத்தை முன்னிட்டு புழல் காவல்துறை சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி

தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் காவலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக சென்னை கொளத்தூர் காவல் மாவட்டம் புழல் சரகம் புழல் M 3 காவல் நிலையம் காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த் தலைமையில் பள்ளி மாணவர்கள் மற்றும் காவல் துறை இணைந்து போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது பேரணியில் குமார் 1500 மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு போதை பொருளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர் ஒழிப்போம் ஒழிப்போம் போதை ஒழிப்போம் காப்போம் காப்போம் இன்றைய இளைஞர்களை காப்போம் என பல்வேறு வகையான கோஷங்களை எழுப்பியவாறு சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை பேரணியாக சென்று போதை விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்

இப்பேரணியானது புழல் பொப்புளி ராஜா அரசு மேல்நிலைப் பள்ளியில் துவங்கி புழல் கேம்ப புழல் சிறைச்சாலை ஜெயின் வித்யாஷ்ரம் பள்ளி ஒற்றை வாடை தெரு வழியாக புழல் கேம்ப் அம்பேத்கர் சிலை அருகே முடிவற்றது பேரணியில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு குளிர்பானம் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது

Exit mobile version