சீர்காழியில் ஒன்றாக மது அருந்திய போது ஏற்பட்ட பிரச்சனையில் கொத்தனார் கட்டையால் அடித்து கொலை ஓட்டுநர் கைது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருத்தோணிபுரம் பகுதியை சேர்ந்தவர்க ண்ணன் (46) கொத்தனார் அதே பகுதியைச் சேர்ந்த
ராஜா ( 42) ஓட்டுநர் இருவரும் அவரவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகின்றார். இரவு நேரங்களில் இருவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்துவது வழக்கம் நேற்று இரவு ஒன்றாக மது அருந்தியதாக கூறப்படுகிறது அப்போது இருவருக்கும் இடையே மது வாங்கிக் கொடுப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறத
இதில் ராஜா, கண்ணனை கட்டையால் அடித்ததில் பின் தலையில் காயம் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெற்று வந்தார். சிகிச்சையில் இருந்த கண்ணன் இன்று காலை இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி காவல் ஆய்வாளர் கமல்ராஜ் மற்றும் போலீசார் இறந்த கண்ணனின் உடலை கைப்பற்றி ஆய்வுக்காக அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்துள்ளனர். குறித்து வழக்கு பதிவு செய்து ராஜாவை கைது செய்து சீர்காழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
