கல்லூரி மாணவர்கள் போதை பழக்கம் மற்றும் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகி விடக் கூடாது அது வாழ்க்கையை அழித்துவிடும் என கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஸ்டாலின் பேச்சு .
சிலம்பம்,யோகா , உட்பட தற்பாதுகாப்பு பாரம்பரிய கலைகளோடு களை கட்டிய கல்லூரி விழா
இருசக்கர வாகன மோட்டரில் உருவாக்கிய கார் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்தது
கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் பகுதியில் அமைந்துள்ள மரியா கல்விக் குழும கல்லூரிகளின் ஆண்டு விழா நடைபெற்றது ,
விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் டாக்டர் .ஸ்டாலின் கலந்து கொண்டார் விழாவில் ஆடல் பாடல் நடனம் உட்பட பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது சிறப்பு விருந்தினரை வரவேற்று வகையில் சிலம்பம் ,களரி ,யோக உட்பட பாரம்பரிய ரீதியான கலைகளோடு மாணவ மாணவிகள் விழா அரங்கை அதிர வைத்தனர்.
தொடர்ந்து பல துறைகளில் சாதனை படைத்த பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன இருசக்கர வாகன இஞ்சினை கொண்டு மாணவர்கள் தயாரித்த சிறிய ரக கார் அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்தது ,
இதை தயாரித்த மாணவர்களை காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் பாராட்டி மாணவர்களை ஊக்கப்படுத்தி அவர்களோடு புகைப்படம் எடுத்து கொண்டார்.
தொடர்ந்து மாணவ மாணவிகளிடையே பேசிய அவர்,
போதை பழக்கம் என்பது ஒரு புற்று நோய் போன்றதாகும். அதில் பழக்கம் ஏற்பட்டால் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும்.
போதை பழக்கத்தை நண்பர்களின் வற்புறுத்தலால் ஒரு முறை தானே என்று பயன்படுத்திக் கொண்டால் பின்னர் அது பழக்கமாகி வாழ்க்கையே அழித்து விடும்.
அது உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் சமூதாயத்திற்கும் தீமை ஏற்படுத்தும். சிறிய சந்தோஷத்திற்காக பழக்கம் ஏற்படுத்திக் கொண்டால் வாழ்க்கை முழுவதும் சிக்கலை ஏற்படுத்தும். வழக்குப் பதிவு ஆகிவிட்டால், வெளிநாடு போக முடியாது.
அரசு வேலைக்கு செல்ல முடியாது. நிஜ வாழ்க்கை வேறு, கற்பனை வாழ்க்கை வேறு என்ற புரிதல் ஒவ்வொருவருக்கும் வேண்டும்.
சமூக வலைத் தளங்களில் அதிக நேரம் செலவிடுவதும் பெரும் தீமையைத் தரும். சமூக வலைத் தளங்களும், போதைப் பழக்கங்களும் சின்ன சின்ன சந்தோஷங்களைக் கொடுக்கும் இறுதியில் பெரும் தீமைகளை உருவாக்கும்.
மாணவிகள் பொய்யாக பேசி மயக்குபவர்களின் வலையில் வீழ்ந்துவிடக்கூடாது.
நமது தனித்துவமான மருத்துவ முறைகளை கிராம புற மக்களுக்கு நியமான கட்டணத்தில் கொடுக்க முடியுமா,
அவர்களும் இதனை எளிதல் பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்பதை குறித்து சிந்திக்க வேண்டும். படித்த பின்னர் ஒரு வேலையை தேர்வு செய்யும் போது அது உங்களுக்கும்,
உங்களது குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியைத் தர வேண்டும் அப்போது தான் நீங்கள் ஒரு சரியான வேலையை தேர்வு செய்துள்ளீர்கள் என்று பொருள். நமது பாரம்பரிய மருத்துவ முறைகள் உலகுக்கு எப்படி பங்களிக்கப் போகிறது என்று சிந்திக்க வேண்டும்.
மாணவியர்கள் படிப்பை முடித்தவுடன் பெற்றோர்கள் நிர்பந்திக்கிறார்கள் என்று திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளக் கூடாது.
படிப்பிற்கேற்ற வேலையை அடைய முயற்சிக்க வேண்டும். படிப்பினால் பலன் இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் செய்தித்தாள் படிக்க வேண்டும் என பேசினார்.

















