பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் 108 பேரும், மாவட்ட தலைவர்கள் 108 பேரும் மாநில நிர்வாகிகள் 50 என 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பாமகவின் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், பொதுச்செயாலளர் முரளி சங்கர், பொருளாளர் சையத் மன்சூர் உசேன், மக, ஸ்டாலின், தீரன், கரூர் பாஸ்கர், வன்னியர் சங்க தலைவர் புதா, அருள்மொழி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சட்டமன்ற தேர்தலுக்கு கட்சி வலுப்படுத்துவது ராமதாஸ் கிராமங்கள் தோறும் சென்று சந்திப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. கூட்டத்திற்கு பிறகு தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக சட்டமன்ற உறுப்பினரும், இணைப் பொது செயலாளருமான அருள் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கிராமங்கள் தோறும் சென்று மக்களை சந்திக்க உள்ளதாகவும், பெண்னாகரத்தில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் பயணத்தை மருத்துவர் ராம்தாஸ் தொடங்க இருப்பதாக கூறினார். ஒவ்வொரு தொகுதிகளிலும் மூன்று கிராமங்களுக்கு சென்று ராமதாஸ் மக்களை சந்திக்க உள்ளதாகவும், டிசம்பர் வரை கட்சி நிர்வாகள் செய்ய வேண்டிய தேர்தல் பணி குறித்து பொறுப்பாளர்களுக்கு இன்றைய மாவட்ட செயலாளரக்ள், மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் மருத்துவர் ராமதாஸ் உள்ள கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் வெற்றி கூட்டணியை மருத்துவர் ராமதாஸ் அமைப்பார் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி என்பது மருத்துவர் ராமதாஸ் மட்டுமே அவர் தலைமையில் உள்ளது தான் பாமக என தெரிவித்தார். பாமகவிற்கு தேர்தல் ஆணையம் அநீதி இழைக்கவில்லை, பாமக
மத்திய மாநில கட்சிகளோடு தான் கூட்டணி வைக்கும் யாருடைய தலையீடு இல்லாமல் மருத்துவர் ராமதாஸ் கூட்டணி வைக்க இருப்பதாகவும், அதிமுகவுடன் கூட்டணி என்பது இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் அதனை மருத்துவர் ராமதாஸ் தான் முடிவு செய்வார் அவருக்கு தான் கூட்டணி அமைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பாமகவின் பொதுக்குழு மீண்டும் டிசம்பர் மாதத்தில் கூட்டப்படுமென அருள் தெரிவித்துள்ளார்.