விழுப்புரத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பல்வேறு பகுதியில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ள விழுப்புரம் நகர பகுதியான புதிய பேருந்து நிலையம், ஆஷா குலம், ஊரல் கரை மேட்டுத் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் லட்சுமணன் இருசக்கர வாகனத்தில் சென்று ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுடன் குறையை கேட்டு அறிந்து மழை நீரை வெளியேற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி நகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்
