விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே உள்ள மழவராயனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி. குப்புசாமியின் மகள் வெண்ணிலா ராஜதுரை என்பவரின் கூரை வீடு எரிந்து முற்றிலுமாக சாம்பல் ஆனது தகவல் அறிந்த விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளரும் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் ரா லட்சுமணன் அவர்கள் நேரடியாக கிராமத்துக்கு சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி அத்தியாவசிய பொருட்கள் மட்டும் நிதி உதவி மற்றும் அவர்கள் தேவையான ஆவணங்கள் உடனடியாக வீடு வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் நிகழ்வில் விழுப்புரம் வருவாய் துணை வட்டாச்சியர் வருவாய் ஆய்வாளர் மற்றும் கோலியனூர் ஒன்றிய பெருந்தலைவர் சச்சிதானந்தம் ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் தவமணி பொறுப்பு குழு உறுப்பினர் கண்ணப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
