புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் இன்று உரையாற்ற உள்ள கூட்டத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த யாரும் வரவேண்டாம் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் இன்று த.வெ.க. சார்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அதன் தலைவர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கூட்டத்திற்கு வரும் பொதுமக்களை கண்காணிப்பதற்காக 50 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். காவல்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் ஐந்தாயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து யாரும் வர வேண்டாம் என்றும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். அங்கு நடைபெற்றுள்ள பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்த பின் பொதுச்செயலாளர் ஆனந்தும் தொண்டர்களிடம் இதே கோரிக்கையை முன்வைத்தார்.













