சென்னை:
சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த வரலட்சுமி என்ற பெண், பஸ்சில் பயணித்தபோது 4 சவரன் தங்க நகை திருட்டுபோனது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், இதில் தொடர்புடையதாக திருப்பத்தூர் மாவட்ட நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் திமுக உறுப்பினரான பாரதி என்பவரை கைது செய்தனர்.
இந்த கைது தொடர்பாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பதிவில் கடும் விமர்சனம் வெளியிட்டுள்ளார். அதில்,
“திமுகவில் உறுப்பினராகும் போது கொள்ளையடிக்கும் உரிமையே வெகுமதியாக வழங்கப்படுகிறது. பஸ்களில் பிக்பாக்கெட் திருடுவது முதல் அரசு கஜானாவையே சூறையாடுவது வரை, திமுக தனது உறுப்பினர்களுக்கு கொள்ளையடிக்க சம வாய்ப்புகளை வழங்குகிறது” என குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.