தஞ்சாவூரில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக முதல்வர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓரணியில் தமிழ்நாடு என்ற பரப்புரையின் முழக்கத்தைத் தொடங்கி வைத்துள்ளார். தொடர்ந்து 45 நாட்களுக்கு ஒவ்வொரு கிராமம், நகரம், பூத் என தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்தை ஒலிக்கச் செய்யவுள்ளது திமுக.
பாஜக ஆட்சி அமைந்துள்ள மாநிலங்கள் பாசிசத்தின் பரிசோதனைக் கூடங்களாக மாறி வருகின்றன. உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்கள் கூட தங்கள் தாய் மொழியை இழந்து இந்தி என்ற ஒரு மொழியை மட்டும் கற்கும் அவலத்தில் சிக்கியுள்ளன.
தமிழ்நாட்டையும் பாசிசம் என்ற கொடூர விஷத்தை பரிசோதித்து பார்க்கும் பரிசோதனைக் கூடமாக மாற்ற மத்திய பாஜக அரசு நினைக்கும் இந்த நேரத்தில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு அதை எதிர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
பாஜக ஆட்சி அமைந்துள்ள மாநிலங்கள் பாசிசத்தின் பரிசோதனைக் கூடங்களாக மாறி வருகின்றன. உத்தரபிரதேசம், பிகார் உள்ளிட்ட வட மாநிலங்கள் கூட தங்கள் தாய் மொழியை இழந்து இந்தி என்ற ஒரு மொழியை மட்டும் கற்கும் அவலத்தில் சிக்கியுள்ளன.
தமிழ்நாட்டையும் பாசிசம் என்ற கொடூர விஷத்தை பரிசோதித்து பார்க்கும் பரிசோதனைக் கூடமாக மாற்ற மத்திய பாஜக அரசு நினைக்கும் இந்த நேரத்தில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு அதை எதிர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
பாஜக என்கிற பாசிச சக்தி தமிழ்நாட்டை எப்போதும் வன்மத்துடன் பார்க்கிறது. ஒன்றியத்தில் ஆட்சியைப் பிடித்த பிறகு ஏற்பட்ட பாதிப்பை விட தமிழ்நாடு அரசு பாஜகவின் கோரப்பிடியில் சிக்கினால் ஏற்படும் ஆபத்து மிகவும் கொடூரமானதாக இருக்கும். அதற்கு அதிமுக கூட்டணி என்ற பெயரில் அடித்தளம் அமைத்துக் கொடுத்து வருகிறது.
அண்மைக்காலமாக தமிழ்நாடு பண்பாடு, கலாசாரம், அரசியல் ரீதியிலான அநீதிகளை சந்தித்து வருகிறது. கீழடி தொன்மையை அங்கீகரிக்க மறுப்பது, இந்தி திணிப்பு, கல்விக்கான நிதியை நிறுத்தி வைப்பது, கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள மாநில உரிமைகளை அபகரிப்பது, நீட் தேர்வு மூலம் இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என பல்வேறு அநீதிகள் மத்திய பாஜக அரசால் தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படுகிறது.
இந்தப் பரப்புரை 3ம் தேதி முதல் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வீடு, வீடாக சென்று மேற்கொள்ளப்படும். இதில், மொத்த வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்களை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அதற்கு முன்பாக 2ம் தேதி சட்டப்பேரவை உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், சார்பு அணியினர் உள்ளிட்டோருடன் இணைந்து பொதுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில்
முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், மக்களவை உறுப்பினர் முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் திருவையாறு துரை. சந்திரசேகரன், தஞ்சாவூர் டி.கே.ஜி. நீலமேகம், மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆகியோர் உடனிருந்தனர்.