சமூகத்தை துண்டாடும் மலிவான அரசியல் செய்பவர்களை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்றும், 2026-லும் திமுக ஆட்சி தொடரும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் உத்தங்குடியில் 3 ஆயிரத்து 65 கோடி ரூபாயில் முடிவுற்ற 63 பணிகளை தொடங்கி வைத்தும், 17 கோடி ரூபாயில் புதிதாக 7 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் முதலமைச்சர் உரையாற்றினார்.
அப்போது தமிழக அரசு நிறைவேற்றி வரும் பல்வேறு நலத்திட்டடங்களை முதலமைச்சர் பட்டியலிட்டார். திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் அதேவேளையில், மத்திய பிஜேபி அரசு, 10 ஆண்டுகளுக்கு முன் அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனையைக் கூட இன்றுவரை திறக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். மதுரை நான்கு மாசி வீதிகளிலும் பழைய பாதாள சாக்கடை குழாய்களுக்குப் பதிலான புதிதாக பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் என்றார்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது பற்றி குறிப்பிட்ட முதலமைச்சர், ஆன்மிகம் என்பது மனஅமைதியை தந்து, ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்றார்.
அறத்தை விரும்பும் அமைதியான மாநிலமாக தமிழ்நாடு என்றென்றும் விளங்கும், அதை சிதைக்க நினைப்பவர்களின் எண்ணம் ஈடேறாது என்றும் குறிப்பிட்டு பேசினார்.
















