திமுக அரசு ஏராளமான ஊழல்களை தொடர்ந்து செய்து வருகிறது. திமுக அரசின் ஊழல் பட்டியல் என்பது நீளமாக உள்ளது. திமுக ஆட்சியை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் ராகுல் காந்தியால் பிரதமராகவே முடியாது உதயநிதி ஸ்டாலினால் முதல்வராகவே முடியாது: நெல்லை பாஜக மாநாட்டில் அமித்ஷா பரபரப்பு பேச்சு
பாரதிய ஜனதா கட்சியின் குமரி மண்டல பூத் பொறுப்பாளர்கள் மாநாடு திருநெல்வேலி தச்சநல்லூரில் நடந்தது இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள 28 சட்டமன்ற தொகுதி பூத் பொறுப்பாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். ஐந்து பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 8595 பூத்துகளை சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில்,
தமிழ் மண்ணைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனை மிக உயரிய பொறுப்பான துணை ஜனாதிபதி பொறுப்புக்கு முன்னிறுத்திய பிரதமருக்கும் பாஜக தேசிய தலைவருக்கும் முதலில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ராஜ்ய சபாவின் சபாநாயகராக துணை ஜனாதிபதியாக இந்த மண்ணைத் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் போகிறார் என்ற மகிழ்ச்சியை உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் முதல் முதலில் தமிழகத்தின் விஞ்ஞானியான ஏபிஜே அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக அமர்த்தி அழகு பார்த்தோம்
பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் தமிழ் மண்ணையும் தமிழ் மக்களை மதிக்கக் கூடியவராக இருந்து வருகிறார். தமிழ் மண் மக்கள் பண்பாடு ஆகியவை பாதுகாத்து கொண்டாடும் வகையில் தஞ்சை ராஜேந்திர சோழனுக்கு மாபெரும் விழா எடுத்து கௌரவப்படுத்தியவர் பிரதமர். காசி தமிழ் சங்கம் என்ற நிகழ்வு ஆண்டாண்டாக நடைபெற்று சௌராஷ்ட்ரா தமிழ் சங்க விழா நடத்தப்பட்டு வருகிறது தெய்வீக புலவர் திருவள்ளுவரின் திருக்குறளை 13 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து தமிழுக்கு அணி சேர்த்துள்ளார்
மதத்தின் பெயரால் அப்பாவி பொதுமக்களை கொலை செய்த மிகப்பெரிய துக்ககரமான நிகழ்வு பகல்காமில் நடந்தது. வேரோடு தீவிரவாதிகளை அளிக்கும் வகையில் வீடு புகுந்து அவர்களை தாக்கி ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தின் மூலம் பிரதமர் சாதனை படைத்துள்ளார். ஆப்பரேஷன் செந்தூர் மூலம் தீவிரவாதத்தின் முதுகெலும்பை உடைத்து காட்டி உள்ளார் பிரதமர். ஆபரேஷன் மகாதேவ் மூலம் தீவிரவாதிகள் கண்டறிந்து அழிக்கப்பட்டார்கள்.
தெய்வப்புலவர் திருவள்ளுவரின் குறள் வழி நின்று பிரதமர் ஆட்சி நடத்தி வருகிறார். நாடாளுமன்றத்தில் மிக முக்கிய சட்டமன்ற நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரதமர் முதல்வர் யாராக இருந்தாலும் ஊழல் செய்தால் சிறைக்கு சென்றான் பதவியை இழக்க நேரிடும் என சட்டம் கொண்டுவரப்பட்டது. அதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். செந்தில் பாலாஜி பொன்முடி போன்றோர் பல மாதங்கள் சிறையில் இருந்தார்கள் சிறையில் இருப்பவர்கள் ஆட்சியில் இருக்கலாமா?
130 வது சட்ட முன்வடிவை திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக எதிர்க்கிறது். இதனை கருப்பு சட்டம் என திமுக தலைவர் சொல்லிவிடுகிறார் அதனை சொல்வதற்கு அவருக்கு எந்த தகுதியும் இல்லை. வருங்காலத்தில் பாஜக அதிமுக கூட்டணி தேசிய ஜனநாயக ஆட்சி தான் அமைய உள்ளது இந்திய நாட்டில் மிகப்பெரிய ஊழல் ஆட்சி என்பது திமுக ஆட்சி தான். திமுக ஏராளமான ஊழல்களை தொடர்ந்து செய்து வருகிறது.
திமுக அரசு ஊழல் பட்டியல் என்பது நீளமாக உள்ளது. டாஸ்மாக் போக்குவரத்து கனிம வளம் என பல ஊழல்களை திமுக அரசு செய்து வருகிறது. வேலை கொடுப்பதற்கு பணம் வாங்கிக் கொண்டு ஊழலை திமுக செய்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி என்பது அரசியல் கூட்டணி அல்ல. தமிழகத்தை மேன்மை அடைய செய்து வளர்ச்சி அடையச் செய்து முன்னேற்றத்திற்கான கூட்டணியாக அமைந்துள்ளது. பாஜக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் மிகப்பெரிய வெற்றியை குவித்து வருகிறது நாடு முழுவதும் இந்த வெற்றியை குவிப்பதற்கு பூத் கமிட்டி உறுப்பினர்களை காரணம்.
வரும் 8 மாத காலத்தில் ஒவ்வொரு வாக்குச்சாவடி பொறுப்பாளர்களும் தெருமுனை கூட்டத்தை நடத்த வேண்டும் வீடு வீடாக செல்ல வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள் அவர்களுக்கு எவ்வாறு பயன்பெறும் என்பதை விளக்கி வீடு வீடாக சென்று மக்களை சந்திக்க வேண்டும்.
இந்தியா கூட்டணி நிர்வாகிகள் ஒரு கனவை கண்டு கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு அவர் மகன் பிரதமராக வேண்டும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அவர் மகன் முதலமைச்சராக வேண்டும். ஒரு நாளும் உதயநிதி முதலமைச்சர் ஆகப்போவதில்லை. ராகுல் காந்தி பிரதமராக வரவே முடியாது. அவர்கள் போட்டியிடும் இடத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
சாமானிய மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் விற்பனை வரியான ஜிஎஸ்டி மிகப்பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஒரு லட்சம் கோடி திட்ட முதலீடு செய்து இளைஞர்கள் காண புதிய வேலைவாய்ப்பை உருவாக்கி உள்ளார்
இந்தியா முழுவதும் சமநிலைக் கான திட்டத்தை பிரதமர் கொண்டு வந்துள்ளார். தேர்தலில் திமுகவை வேரோடு பிடுங்கி எறிந்து தேசிய ஜனநாயகத்தின் கூட்டணி வெற்றியை அறிவிப்பதற்காக நீங்கள் வந்துள்ளீர்கள். இந்த வெற்றி உங்களால் கொண்டுவர முடியும். வெற்றிக்கான முழக்கத்தை முன்னெடுங்கள் வணக்கம் என நிறைவு செய்தார்
மாநாட்டில் பாஜக மாநில தலைவர் நயியனார் நாகேந்திரன் மூத்த தலைவர்கள் தமிழிசை சௌந்தர்ராஜன் வானதி சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்