உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட பிடாரி கோயில் தெரு புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இதில் உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும் பிரார்த்தனை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் கேக் வழங்கியும் பரிசுகள் வழங்கியும் மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் வாரை பிரகாஷ், சிறுபான்மை அணியினர் மற்றும் சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் மீனாட்சி சூரியபிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர்.
திருவாரூரில் கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு புனிதபாத்திமாஅன்னை ஆலயத்தில்DMKபூண்டி கலைவாணன் பரிசு வழங்கி கொண்டாட்டம்
