பழைய பேருந்துக்கு மாற்றாக புதிய பேருந்து துவங்கி வைத்து பேருந்தை ஓட்டிய எம்எல்ஏ ஆரவாரத்துடன் திமுகவினர் பேருந்தில் பயணம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தரங்கம்பாடி திருக்கடையூர் வழியாக மயிலாடுதுறைக்கு இயக்கி வந்த 27 (C) என்ற எண் கொண்ட நகர பேருந்து பழைய பேருந்துக்கு பதிலாக புதிய பேருந்து சேவை துவக்கம் நடைபெற்றது இந்த பேருந்தை நம்பி ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர் புதிய பேருந்து பொறையார் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கியது இதனை பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன் கொடியசைத்து துவங்கி வைத்தார் பின்னர் ரிப்பன் வெட்டி பேருந்தை இயக்கினார் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம் முருகன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பேருந்தை தானே ஓட்டி சென்றார் அவருடன் பேருந்தில் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்து ஆரவாரத்துடன் சென்றனர் பேருந்து துவங்கிய இடத்திற்கு மீண்டும் வந்தது பேருந்தை தானே ஓட்டி சென்ற பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரை பார்த்து பலரும் உற்சாகத்துடன் தையசைத்துக் காட்டினர் ஓட்டுநர்களையே மிஞ்சும் அளவிற்கு பேருந்தை இயக்கிய சட்டமன்ற உறுப்பினர்.

















