மழையில் குடைபிடித்து கொண்டே திமுகவினர் மொழிப்போர் தியாகி மாணவர் ஈகி.சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் மலர்வளையம் வைத்து மலர்தூவி வீரவணக்கம் செலுத்தி அஞ்சலி
மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏவிசி தனியார் அரசு உதவிபெறும் கல்லூரி முகப்பில் அமைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகி மாணவர் ஈகி சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் மழையில் குடைபிடித்தவாறு திமுக மாவட்ட செயலாளர் நிவேதாமுருகன் தலைமையில் ஒன்றிய, நகர நிர்வாகிகள் தொண்டர்கள் என 100 க்கும் மேற்பட்டோர் மழையையும் பொருட்படுத்தாமல் குடைபிடித்தவாறு மலர்வளையம் வைத்து மலர்தூவி வீரவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்
