ஆர்.பி.உதயக்குமார் உருவ பொம்மை எரிப்பு..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் உருவ பொம்மையை திமுகவினர் எரித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கேலிச்சித்திரம் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்ட திமுகவினரை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விமர்சித்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் உருவ பொம்மையை திமுகவினர் எரித்தனர்.

மன்னார்குடி ருக்மணி பாளையம் சாலையில் பேரறிஞர் அண்ணா சிலை அருகே கொடும்பாவியை எரித்த திமுகவினர் முன்னால் அமைச்சர் ஆர் பி உதயகுமாரை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் தஞ்சை திருவாரூர் பட்டுக்கோட்டை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Exit mobile version