திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில் வரும் 29-ம் தேதி கட்சியின் மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு கலைஞர் உரிமைத்தொகை, விடியல் கட்டணமில்லா பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டம், தோழி விடுதி என மகளிரின் மேம்பாட்டுக்காக தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் பல்லடத்தில் வரும் 29-ம் தேதியன்று திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில், மாலை 4 மணியளவில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்ற பெயரில் கட்சியின் மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறவுள்ளதாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

















