இரட்டை வேடத்தில் திமுக கில்லாடி… கருணாநிதி VS ஸ்டாலின் – பவன் கல்யாண்

திருவான்மியூரில் பா.ஜ.க சார்பில் நடந்த ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பான கருத்தரங்கில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பவன் கல்யாண் பேசியதாவது : தமிழகம் சித்தர்களின் பூமி. கடவுள் முருகனின் பூமி. தமிழகம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடக்கும் பூமி. ஒரே நாடு , ஒரே தேர்தல் குறித்து பொய்யான தகவல்கள் பரப்பப்படுகிறது.

சிலர் இரட்டை வேடம் போடுகிறார்கள். எதிர்க்கட்சிகள் ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்து தங்களுக்கு சாதகமான கருத்துகளை கூறி வருகின்றனர். மாமியார் உடைத்தால் மண் குடம். மருமகள் உடைத்தால் பொன் குடம் என எதிர்க்கட்சியினர் செயல்படுகின்றனர்.

ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கருணாநிதி ஆதரித்தார். முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கிறார். இப்போது தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது. நான் தமிழகத்தை விட்டு போனாலும், தமிழகம் என்னை விட்டுவிடவில்லை.

ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை மூலம் தேர்தல் செலவுகளை குறைக்க முடியும். இதன் மூலம் பொது மக்களிடம் பல்வேறு திட்டங்களை கொண்டு சேர்க்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

Exit mobile version