திருப்பத்தூரில் DMKமறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு அமைதிஊர்வலம்

திருப்பத்தூரில் மாவட்ட திமுக சார்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு அமைதி ஊர்வலம் நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் திருவுருவ சிலை அருகில் இருந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 57வது திட்டத்தை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட திமுக சார்பாக மாவட்ட செயலாளர் தேவராஜ் தலைமையில் புதுப்படை ரோடு அருகே உள்ள அண்ணாவின் சிலை வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
பின்பு அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அண்ணாவின் புகழ் வாழ்க என கோஷங்கள் எழுப்பி அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்த அமைதி ஊர்வல நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என சுமார் 250க்கும் மேற்பட்ட கலந்து கொண்டனர்

Exit mobile version