• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“50 வாக்குறுதியைக் கூட நிறைவேற்றாத தி.மு.க. ” – அண்ணாமலை குற்றச்சாட்டு

by Priscilla
June 12, 2025
in News
0
“50 வாக்குறுதியைக் கூட நிறைவேற்றாத தி.மு.க. ” – அண்ணாமலை குற்றச்சாட்டு
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

கோவை :
தமிழக அரசின் செயல்திறனை கடுமையாக விமர்சித்த பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, தி.மு.க. அரசு அளித்த 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் 50ஐ கூட நிறைவேற்றவில்லை எனக் குற்றம் சாட்டினார்.

கோவையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது அவர் கூறியதாவது:
“தி.மு.க. போல் அல்லாமல், பா.ஜ. அளித்த வாக்குறுதிகளை நாம் நிறைவேற்றி உள்ளோம். தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் கல்லூரிகள் உள்ள மாவட்டமாக கோவை விளங்குகிறது. ஆனால், இங்கு போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. எனவே, கோவையில் போதைப்பொருள் தடுப்பு அலுவலகம் திறக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் வலியுறுத்தல்.”

மேலும், தேசிய வளர்ச்சி குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்:
“கொரோனா காலத்திலும் கூட, நாங்கள் எடுத்துள்ள இலக்குகளை நோக்கி நம்பிக்கையுடன் சென்றோம். சமீபத்தில், இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது. மத்திய அரசு திட்டங்களை, மாநில அரசு முடக்கப் பார்க்கிறது என்பது வருத்தத்துக்குரியது.”

மத்திய அரசின் பங்கு, தேர்தல் வாக்குறுதி விவாதம்
“பெட்ரோல் விலை உயர்வில் மத்திய அரசின் பங்கு இல்லை. தமிழகம் வழங்கும் ஒவ்வொரு ரூபாயுக்கும் மத்திய அரசு நியாயமான முறையில் திருப்பி வழங்கியுள்ளது. தி.மு.க. அளித்த 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் 50ஐ கூட நிறைவேற்றவில்லை,” என்றும் அவர் தெரிவித்தார்.

அரசியல் நிலைப்பாடு மற்றும் கூட்டணி விவரம்
“நான் பா.ஜ. தொண்டன். உயிருள்ளவரை இந்தக் கட்சிக்கே உழைப்பேன். கட்சி எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நடப்பேன். சில நேரங்களில் எங்கே வாயை மூட வேண்டுமோ, அங்கே வாயை மூடுகிறேன். தமிழகத்தில் அரசியல் மாற்றம் உறுதியாக ஏற்பட வேண்டும்.”

கூட்டணிகளைப் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர்,
“கூட்டணிக்கு எண்ணிக்கையை விட, எண்ணமே முக்கியம். கூட்டணி இரண்டு வகை – பொருந்தும் கூட்டணி, பொருந்தா கூட்டணி. அ.தி.மு.க. – பா.ஜ. கூட்டணி எதிர்காலத்தில் பொருந்தும் கூட்டணியாக மாறும்,” என்று தெரிவித்தார்.

Tags: bjp annamalaiCOVAIdmkmk stalin
Previous Post

தந்தையை மீறிய தமையன் இருக்க கூடாது – மருத்துவர் ராமதாஸ்

Next Post

தென்காசி : உணவு ஒவ்வாமையால் மூவர் உயிரிழப்பு – 8 பேருக்கு தீவிர சிகிச்சை

Related Posts

மயிலாடுதுறையில் VCKசார்பாக ஞானேஷ் குமார் பதிவிறக்க கோரி &நகராட்சியில் துப்புரவு பணிஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறையில் VCKசார்பாக ஞானேஷ் குமார் பதிவிறக்க கோரி &நகராட்சியில் துப்புரவு பணிஆர்ப்பாட்டம்

October 31, 2026
கடலுக்கு மீன் பிடிக்க சென்ற வெள்ளகோவில் மீனவர் மாயம்
News

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற வெள்ளகோவில் மீனவர் மாயம்

October 31, 2026
மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் சமுதாய வளைகாப்பு விழா – 2026
News

மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் சமுதாய வளைகாப்பு விழா – 2026

October 31, 2026
டாக்டர் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் 25 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா
News

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து தமிழரசி தலைமையில் ஆர்ப்பாட்டம்

October 31, 2026
டாக்டர் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் 25 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா
News

கொரட்டூரில் உயர் மின்னழுத்த மின்சாரம் தாக்கி கேபிள் டிவி ஆபரேட்டர் படுகாயம்

October 31, 2026
டாக்டர் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் 25 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா
News

மயிலாடுதுறையில் DMK மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

October 31, 2026
Next Post
தென்காசி : உணவு ஒவ்வாமையால் மூவர் உயிரிழப்பு – 8 பேருக்கு தீவிர சிகிச்சை

தென்காசி : உணவு ஒவ்வாமையால் மூவர் உயிரிழப்பு – 8 பேருக்கு தீவிர சிகிச்சை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


மயிலாடுதுறையில் VCKசார்பாக ஞானேஷ் குமார் பதிவிறக்க கோரி &நகராட்சியில் துப்புரவு பணிஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறையில் VCKசார்பாக ஞானேஷ் குமார் பதிவிறக்க கோரி &நகராட்சியில் துப்புரவு பணிஆர்ப்பாட்டம்

by Satheesa
October 31, 2026
கடலுக்கு மீன் பிடிக்க சென்ற வெள்ளகோவில் மீனவர் மாயம்
News

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற வெள்ளகோவில் மீனவர் மாயம்

by Satheesa
October 31, 2026
மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் சமுதாய வளைகாப்பு விழா – 2026
News

மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் சமுதாய வளைகாப்பு விழா – 2026

by Satheesa
October 31, 2026
டாக்டர் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் 25 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா
News

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து தமிழரசி தலைமையில் ஆர்ப்பாட்டம்

by Satheesa
October 31, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6