திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் – அர்ஜுன் சம்பத்

திருப்பூர்: அர்ஜுன் சம்பத் பேட்டி; தவெகவை தடை செய்ய வேண்டும், திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

மத்திய அரசு வரி குறைப்பால் பொருட்கள் விலை குறைந்துள்ளது. ஆனால் திருப்பூரில் அமெரிக்க வரி விதிப்பால் பொருளாதாரம் சீர் கெட்டுள்ளது என தவறான தகவல்களை, வெறுப்பு பிரச்சாரத்தை பரப்புகின்றனர். திடக்கழிவு மேலாண்மை திட்டம் இல்லாமல் திருப்பூர் மாநகராட்சி பாறைக் குழியில் கொட்டி வருகிறது. இது நிர்வாக தோல்வி. தூய்மை பணியாளர்களை சென்னையில் ஒடுக்கியதை போல திருப்பூரிலும் குப்பை பிரச்சினை குறித்து போராடினால் ஒடுக்கப்படுகின்றனர். மாநகராட்சியில் ஊழல்‌ பெருகி உள்ளது.

கரூரில் ஜோசப் விஜய் நடத்திய பரப்புரையில் 40க்கும் மேற்பட்டோர் பலியானது அநியாயம். கூட்டம் கூடும் என அரசுக்கும் தெரியும். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத இது கையாலாகாத அரசு. எதிர்கட்சிகள் கூட்டத்தை சீர்குலைப்பது அவர்கள் நோக்கம். கள்ளச்சாராய மரணத்தின் போது முதல்வர் நேரில் செல்லவில்லை. நிவாரணம் அனைவரும் வழங்கினர் ஆனால் இனி நடக்க கூடாது என்பதற்கு யார் பொறுப்பு. ஒரு நபர் விசாரணை கமிஷன் விசாரணையில் காவல் துறை பின்னே இருந்து சிக்னல் தருகின்றனர். இதற்கு சிபிஐ விசாரணை வேண்டும்.

தவெக காரணம் என்றால் தவெகவை தடை செய்யுங்கள், விஜயை கைது செய்யுங்கள். ஆளுநர் இந்த ஆட்சியை (டிஸ்மிஸ்)தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.தங்கள் செல்வாக்கை காட்ட கூட்டம்‌ சேர்க்கின்றனர். நிவாரணம் மீட்பு என்பது முதல். அடுத்து திமுக, தவெக, விஜய் என தவறு நடந்துள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாதவர்கள் எதற்கு பரப்புரை செய்ய வேண்டும்.

உங்களை பாருங்கள் விஜய். உங்கள் தொண்டரை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் கட்சியை கலைத்து விடுங்கள்.மாற்று கருத்து சொல்பவர்களை , அரசின் தவறுகளை சுட்டி காட்டுபவர்களை உடனே கைது செய்கிறது. இது தான் கருத்து சுதந்திரமா.எடப்பாடி ஆட்சியில் இந்த மரணம் நிகழ்ந்திருக்கல் சும்மா இருப்பீர்களா? பிரகாஷ்ராஜ் போன்ற நடிகர்கள் எல்லாம் எங்கே போனீர்கள்.

திமுக, தவெக மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜய் கூட்டங்களில் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்த படுகிறது. திமுக பாஜக, அதிமுக, தவெக என மூன்றையும் ஒழிக்க ஏ.டீம், பி டீம் என வைத்து பொய்த்தகவல்களை பரப்பி வருகின்றனர். திமுக தான் ஐ.ஏ.எஸ் ஆபீசரை பேச வைத்துள்ளனர். இது திமுகவின் காலங்காலமாக செய்து வரும் வழக்கம்.

Exit mobile version