மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தையே முடக்கும் முயற்சியில் மத்திய பாஜக அரசு செயல்படுகிறது தமிழ்நாடு தலைகுனியாது’ தலைப்பில் திமுக கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் பேச்சு.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் தமிழக முழுவதும் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்கிற தலைப்பில் பூத் வாரியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் அரிச்சந்திரபுரம் ஊராட்சிக்குட்பட்ட 283 மற்றும் 284 ஆகிய பூத் நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் ஐ.வி. குமரேசன் கலந்து கொண்டு திமுக அரசின் சாதனைகள் குறித்து மக்களிடம் எடுத்துக் கூறி கூடுதல் வாக்குகளை பெற கட்சி நிர்வாகிகள் பாடுபட வேண்டும் .மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம். திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான பிரதமர் மன்மோகன் ஆட்சியில் 2006-ல் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் 100 நாள் வேலைத் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் மத்திய அரசு 60 சதவிகிதம் மாநிலங்கள் 40 சதவிகிதம் என நிதிப் பகிர்வு முறை, தினசரி ஊதியம் வாராந்திர அடிப்படையில் வழங்கவேண்டும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மத்திய அரசு முடக்க நினைக்கிறது ஆனால் திமுக தான் 100 நாள் வேலை கொடுக்கவில்லை என அதிமுகவினர் கிராமங்கள் தோறும் கூட்டத்தை நடத்தி பொய் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர் தமிழகத்தில் பேரிடர் பாதித்த போது மத்திய அரசு உரிய நிதியை வழங்காமல் தமிழகத்தை புறக்கணித்து வந்தது ஆனால் நிதி இல்லாத போதும் தமிழக மக்களை பாதுகாக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருகிறது 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் என பேசினார்
















