சிறை காவலர் உள்ளிட்ட மூன்று பேரை வீடு புகுந்து தாக்கிய திமுக கவுன்சிலர் மீது வழக்கு பதிவு. கவுன்சிலர் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு
திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட 30வது வார்டு கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் கிஷோர் (26).இவரது வீட்டின் முன்பு அந்தப் பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோயில் திருப்பணி தொடர்பாக 30 வது வார்டு கவுன்சிலர் புருஷோத்தமன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பிளக்ஸ் போர்டு ஒன்றினை வைத்தனர். இதற்கு கிஷோர் ஏன் எனது வீட்டின் முன்பு வைக்கிறீர்கள் என சென்று கேட்டுள்ளார். இதனால் இரு தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.
இதில் 30வது வார்டு திமுக கவுன்சிலர் புருஷோத்தமன் அவரது மகன் பிரவீன்மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த ராகுல்,நிர்மல்ராஜ், பூபதிராஜா, ஐயப்பன்,சௌந்தர பாண்டியன், முனுசாமி, ஹரிஷ், இளங்கோ,அபி மணி ஆகியோர் கிஷோரையும் அவரது நண்பர்கள் விக்னேஷ் சிறைத்துறை காவலர் இளங்கோ ஆகியோரை தாக்கியுள்ளனர்.
இதில், கிஷோர் அவரது நண்பர் விக்னேஷ் ஆகிய இருவரும் காயம் அடைந்த நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது தொடர்பாக, கிஷோர் கொடுத்த புகாரின் பேரில் திமுக கவுன்சிலர் புருஷோத்தமன் அவரது மகன் ராகுல் உட்பட 11 பேர் மீது திருவாரூர் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அதே போன்று திமுக கவுன்சிலர் புருஷோத்தமன் கொடுத்த புகாரில் சிறைத்துறை காவலர் இளங்கோவன் அவருடைய நண்பர்கள் கிஷோர் விக்னேஷ் ஆகிய மூன்று பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த நிலையில் திமுக கவுன்சிலர் புருஷோத்தமன் தனது ஆதரவாளர்களுடன் கிஷோர் உள்ளிட்டோரை தாக்கும் வீடியோ சமூக வலை தளங்கலில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.