விழுப்புரம் இளைஞர்களுக்கு விளையாட்டுஉபகரணம் வழங்கியDMKமத்திய மாவட்டபொறுப்பாளரும் லட்சுமணன் வழங்கினார்

விழுப்புரம்: இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கிய திமுக விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான லட்சுமணன் வழங்கினார்.

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில், அரசு மற்றும் கட்சி சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் 18-வது வார்டு பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் திமுக விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான மருத்துவர் லட்சுமணன் 18-வது வார்டு இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் விதமாக விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். இந்நிகழ்வில் 18-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சசிரேகா பிரபு கலந்துகொண்டார்.

இளைஞர்களிடையே உரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், இளைஞர்கள் படிப்போடு விளையாட்டுத் துறையிலும் கவனம் செலுத்தி உடல்நலனைப் பேணிக் காக்க வேண்டும் என்றும், திறமைகளை வளர்த்துக்கொண்டு மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்றும் வாழ்த்தினார்.

Exit mobile version