மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் நிவேதா முருகன் 8,260 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றார்:-
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் எம்எல்ஏ நிவேதா முருகன் முதல் சுற்றில் இருந்து 10 சுற்றுகள் வரை பின் தங்கிய நிலையில் 11-ம் சுற்றில் இருந்து முன்னிலை பெற்று வந்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் பவுன்ராஜ் பெற்ற 72,836 வாக்குகளை விட கூடுதலாக திமுக வேட்பாளர் எம்எல்ஏ நிவேதா முருகன் 81,096 வாக்குகள் கூடுதலாக பெற்று 8260 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதேபோல் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வன் 71, 449 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் சக்தியை விட 11,4172 வாக்குகள் கூடுதல் பெற்று வெற்றி பெற்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சான்றிதழை பெற்றார்.
திமுக கூட்டணி கட்சி சார்பில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு கூட்டணி கட்சியினர் மாலை சால்வை அணிவித்து பட்டாசு வெடித்து உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
