திருவாரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பூண்டி.கலைவாணன் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு கிராம மக்கள் பூர்ண கும்ப மரியாதை அளித்தும் ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக கட்சி சார்பில் திருவாரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் திமுக மாவட்ட செயலாளரும் ஆன பூண்டி.கலைவாணன் தனது சொந்த ஊரான சமூககுடி கிராமத்தில் இருந்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தொடர்ந்து கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட கமுகக்குடி, புறசாத்தங்குடி, பத்தூர் மேல்கரை, கிளரியம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று நேரடியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவருக்கு பொதுமக்கள் பூர்ணகும்ப மரியாதை செய்தும், ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்தும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
இந்த பிரச்சாரத்தின் போது திமுக ஒன்றிய செயலாளர் சேகர் என்கிற கலியபெருமாள், பாலச்சந்தர்,பேரூர் கழகச் செயலாளர் கலைவேந்தன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
