திமுக ஆட்சி பொறுப்பேற்று இதுவரை 30-க்கும் மேற்பட்ட ஆணவ கொலைகள் நடந்துள்ளதாக புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லையா, சட்டம் ஒழுங்கை பேணி காக்கிறவர் சரியில்லையா? என அவர் விமர்சித்துள்ளார்.
திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி அருகே புரட்சி பாரதம் கட்சியினர் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.தமிழகத்தில் ஆணவ படுகொலைகள் அதிகரித்து வருவதை கண்டித்தும், ஆணவ படுகொலைக்காக சட்டமன்றத்தில் தனி சட்டம் இயற்ற வேண்டும் எனவும் கூறி புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.அப்போது அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெகன் மூர்த்தி, திமுக ஆட்சிக்கு வந்து தற்போது வரை 30-க்கும் மேற்பட்ட ஆணவ கொலைகள் நடந்துள்ளதகவும், சிறை மற்றும் காவல் நிலையங்களில் மரணங்கள் அதிகரித்துள்ளதாகவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லையா, சட்டம் ஒழுங்கை பேணி காக்கிறவர் சரியில்லையா? எனவும் கேள்வி எழுப்பினார். ஆணவ கொலைகளுக்கு எதிராக சட்ட மன்றத்தை கூட்டி முதல்வர் தனி சட்டம் இயற்ற வேண்டும் எனவும்,ஷதற்போது வரை அதிமுக கூட்டணியில் தான் உள்ளதகவும், ஜனவரியில் பொதுக்குழு கூட்டி கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். கவீன் கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணை போதுமானது எனவும், அதிமுகவில் பிளவு இல்லை எனவும், திமுகவுடன் கூட்டணியா என்ற செய்தியாளரின் கேள்விக்கு மௌனம் சாதித்தார். சிறுவன் கடத்தல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், நீதிமன்றத்திற்கு கட்டுப்பட்டு உள்ளதால் அது குறித்து கருத்தூ கூற முடியாது எனவும், விஜய் கட்சி கூட்டணியில் பங்கு கொடுத்தால் என்ற கேள்விக்கு,, ஜெயிக்கிற குதிரை மீதுதான் பந்தயம் கட்டுவார்கள் அந்த நேரத்தில் எந்த குதிரை ஜெயிக்கும் என்பது அப்போதுதான் தெரியும் எனவும் அவர் தெரிவித்தார்.