மயிலாடுதுறையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவின் ரோடுஷோ நிகழ்ச்சி சுவாரசியம். விஜயகாந்தின் கள்ளழகர் பாடலுக்கு கை அசைவுகளால் நடனமாடி பிரேமலதா உற்சாகம்:- விசில் அடித்து ஆரவாரம் செய்த தொண்டர்கள். விஜயகாந்த் வேடமணிந்து அவரது குரலில் பேசி நடைபெற்ற கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது. பிரேமலதாவின் கன்னத்தை கிள்ளி முத்தமிட்ட பெண்:-
மயிலாடுதுறையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளம் தேடி இல்லம் நாடி பிரச்சாரப்பயணம் மேற்கொண்டார். அவர் சின்ன கடைவீதியில் மக்களை தேடி மக்கள் தலைவர் கேப்டன் ரதத்திற்கு படையல் இட்டு ரோடு ஷோவாக நடந்தும் ரதத்தில் ஏறியும் மக்களை சந்தித்து கையசைத்து சென்றபோது விஜயகாந்தின் கள்ளழகர் திரைப்பட பாடலை ரசித்து விசில், அடித்த தொண்டர்களையும் நடனமாடி, கூச்சலிட்ட தொண்டர்களையும் எழுச்சி அடைய செய்யும் வகையில் தானும் பாடலை ரசித்து பாடலுக்கு ஏற்ப கையசைவு நடனமாடி பிரேமலதா உற்சாகமடைந்தார். கால் டெக்ஸ் பகுதியில் பரப்புரை நிறைவடைந்த நிலையில் ஆடும் குதிரைகளுக்கு சால்வை அணிவித்தபோது ஒரு குதிரை சால்வையை ஏற்காத நிலையில் சிரித்தவாறு குதிரைக்காரிடம் சால்வையை கொடுத்து குதிரைக்கு அணிவித்தார். பெண்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட போது பெண் ஒருவர் பிரேமலதாவின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டார். முன்னதாக சின்ன கடைவீதியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது ஈரோட்டை சேர்ந்த தேமுதிக நிர்வாகி ஒருவர் விஜயகாந்த் வேடமணிந்து விஜயகாந்த் திரைப்பட பாடல்களுக்கு நடனமாடி நடித்தும், விஜயகாந்த் குரலில் பேசியும் கூட்டத்தினரை கவர்ந்தார். தொடர்ந்து குத்தாலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் பிரேமலதா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்த நிர்வாகிகளின் பெயரை படித்த போது அப்பா இவ்வளவு பெயர்களா மூன்று பக்கத்திற்கா பெயர் கொடுப்பீர்கள் அப்படியெல்லாம் சொல்ல முடியாது என்று கூறி நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
