மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் சமூக சேவகர் பாரதி மோகன். இவர் நடத்தி வரும் அறக்கட்டளையின் மூலம் பொதுமக்களுக்கு உணவு வழங்குதல் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சாலையோரம் வசிக்கக்கூடிய ஆதரவற்றோருக்கு புத்தாடைகள் வழங்க வேண்டும் என்ற நோக்கில் சமூக ஆர்வர்கள், பொதுமக்களிடம் நிதி திரட்டியுள்ளார். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் செய்த உதவியின் காரணமாக ஆயிரக்கணக்கான புத்தாடைகளை வாங்கி அதனை மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சாலையோரம் வசிக்க கூடிய ஆதரவற்றோர் மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள பொதுமக்களுக்கு புத்தாடைகள், உணவு வழங்கும் பணியை இன்று துவங்கினார். போர்வை வேஷ்டி , கைலிகள் மற்றும் உணவு உள்ளிட்டவற்றை நேரடியாக சென்று சமூக சேவகர் பாரதி மோகன் வழங்கிய நிலையில் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கனக்கானோருக்கு புத்தாடைகள் வழங்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 
			

















